கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை-சுங்க கேட் பகுதியில் குளம் போல் தேங்கிய மழை நீரால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் அவதி.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் இன்றும் காலை முதல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய மழை தொடங்கியது, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தான்தோன்றி மலை, வெண்ணமலை, காந்திகிராமம், சின்னாண்டான் கோவில், வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளிலும்,
புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக கரூர் மாநகராட்சிக்குட்பட்ட சுங்க கேட் பகுதியில் சாலை முழுவதிலும் மழை நீருடன் கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
காலையிலிருந்து வெயில் தாக்கம் இருந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.