கரூரில் 2வது நாளாக மழை பொதுமக்கள் மகிழ்ச்சி

64பார்த்தது
கரூர் நகர் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள திருமணியூர் காந்திகிராமம் ராயனூர் தாந்தோன்றிமலை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 4 மணியளவில் திடீரென மழை பெய்தது.

இன்று காலை 11: 00 மணி முதலே வெயில் கடுமையாக வாட்டி வந்த நிலையில் இரண்டாவது நாளாக மாலை பெய்துள்ள மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது.

நேற்று மற்றும் கரூர் வட்டாரத்தில் 58 மில்லி மீட்டர் மழை அளவு பதிவான நிலையில் இன்று மீண்டும் மழை பெய்ய துவங்கி இருப்பது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவதால் மாநகராட்சி, குறிப்பிட்ட மழைநீர் தேங்கும் பகுதிகளை கண்டறிந்து மழை நீர் வடிகால்கள் மூலம் மழை நீர் விரைவாக வடிவதற்கு தகுந்த திட்டமிடுதலை வகுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்புடைய செய்தி