புகலூரில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி-ரயில் சேவையில் மாற்றம்.PRO.கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜூன் 12, 14 & 16, ஆகிய தேதிகளில் புகளூர் ரயில்வே தண்டவாளம் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் ரயில் எண். 56809 திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில், ஜூன் 12, 14 & 16 ஆகிய நாட்களில் கரூர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் சந்திப்புக்கு மட்டுமே இயக்கப்படும். கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்புக்கு இயக்கப்படாது. செங்கோட்டையிலிருந்து காலை 05.10க்கு புறப்படும் ரயில் எண். 16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ், ஜூன் 12, 14 & 16 ஆகிய நாட்களில் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும்.
திருச்சிராப்பள்ளி ஜங்ஷனிலிருந்து பிற்பகல் 1.00 மணிக்கு புறப்படும் ரயில் எண். 16843 திருச்சிராப்பள்ளி ஜங்ஷனிலிருந்து பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ், ஜூன் 12, 14 & 16 தேதிகளில் கரூர் ஜங்ஷனில் நிறுத்தப்படும். புகளூரில் பணிகள் முடிந்ததும், அந்த நாட்களில் கரூர் ஜங்ஷனிலிருந்து ஈரோடு மற்றும் பாலக்காடு டவுனுக்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயிலாக இயக்கப்படும்