புலியூர்-டூவீலரில் செல்லும்போது இளைஞன் கீழேவிழுந்து விபத்து

71பார்த்தது
புலியூர் அருகே டூவீலரில் செல்லும்போது இளைஞன் கீழே விழுந்து விபத்து.

கரூர் மாவட்டம், வெங்கமேடு, புளியமரம் பஸ் ஸ்டாப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் மகன் பாரத் வயது 19.

இதே போல என் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் மகன் மாதேஸ்வரன் வயது 25. இருவரும் நண்பர்கள்.


இவர்கள் இருவரும் பிப்ரவரி 18ஆம் தேதி மதியம் 1: 45 மணி அளவில், திருச்சி - கரூர் சாலையில் புலியூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, வாத்தியார் காலனி சர்ச் அருகே டூவீலரை மாதேஸ்வரன் வேகமாக இயக்கியதால், பின்னால் அமர்ந்து வந்த பாரத் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.


இதில் காயமடைந்த பாரத்தை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

சம்பவம் தொடர்பாக பாரத் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மாதேஸ்வரன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி