கதவனை அமைக்க கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்கு.

59பார்த்தது
கதவனை அமைக்க கையகப்படுத்திய நிலத்திற்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி கரூரில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், மாயனூர் காவிரி கதவணை திட்டத்திற்கு 2008இல் நிலம் கையகப்படுத்தப்பட்ட 38 விவசாயிகளுக்கு, நீர்வளத் துறையும், வருவாய் துறையும் இது நாள் வரை இழப்பீடு வழங்காததை கண்டித்தும் , பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியும் விவசாயிகள் சங்கத்தின் சார்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.


இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.


தமிழ்நாடு விவசாய சங்கம் மாநில பொது செயலாளர் சாமி நடராஜன், விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது குறித்து விளக்கி பேசினார்.


இந்த காத்திருப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று, உடனடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கிட மீண்டும் என வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி