கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தலைமை தபால் நிலையம் முன்பு இன்று(ஏப். 14) கரூர் மாநகரில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை நிறுவக் கோரி தமிழ்ப்புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிகழ்ச்சியில் முன்னிலை சுப்பிரமணி மாவட்ட செயலாளர் கிருஷ்ணராயன் தொகுதி முருகேசன் வல்லவன் மாவட்டச் செயலாளர் அரவக்குறிச்சி தொகுதி சரவணன் மாவட்ட செயலாளர் குளித்தலை தொகுதி அஜித்குமார் இளம்புலிகள் அணி கரூர் கண்டன உரை பேரறிவாளன் மாநில பொதுச்செயலாளர் முகிலராசன் மாநில முதன்மைச் செயலாளர் கரூர் மாவட்ட தமிழ்ப்புலிகள் கட்சி சிலை நிறுவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர். கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.