100 நாள் வேலைத் திட்ட நிதி தர மறுப்பு. மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கரூரில். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தமிழகத்துக்கு தரவேண்டிய ரூ. 4034 கோடி, நிதியை வழங்காமல் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திமுக சார்பில் தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் தலா இரண்டு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பெண்கள் பங்கேற்று கோஷமிட்டனர்.
கரூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெரூர் வடபாகம் பேருந்து நிறுத்தத்தில் கிழக்கு ஒன்றிய செயலாளர் முத்துக்குமாரசாமி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.