மாற்றுத்திறனாளிகள் அளித்த மனுக்களுக்கு உடனடி தீர்வு. ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மாற்றுத்திறனாளிகள்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் குறைகள் குறைத்து முறையிடுவது வழக்கம். இதில் மாற்றுத்திறனாளிகள் மனுக்களை அளிக்க சிரமப்படக்கூடாது என்பதற்காக அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகள் அமைத்து அமர்ந்து மனு அளிக்கும் வகையில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் செயல்படுத்தி இருந்தார்.
இன்று மனுக்கள் அளிக்க வந்த மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை மனுக்களாக பெற்ற மாவட்ட ஆட்சியர்
பிரபு சங்கர் உடனடியாக அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனால், மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியருக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.