தமிழ்நாடு அரசின் கொடுமைப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நியாய விலை கடைகளில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதே போல கரூர் மாவட்டத்தில் 337 நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5264.310 மெட்ரிக் டன் அரிசி, 435.072 மெட்ரிக் டன் சர்க்கரை, 132.934 மெட்ரிக் டன் கோதுமை, 24000 லிட்டர் மண்ணெண்ணெய், 281.532 மெட்ரிக் டன் துவரம் பருப்பு, மற்றும் 285.934 லிட்டர் பாமாயில் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது.இவ்வாறு வழங்கப்படும் பொருட்கள் தரமாகவும், எடை சரியாகவும் இருப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று, கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் & லிங்கத்தூர் பகுதிகளில் செயல்படும் நியாய விலை கடைகளில் இன்று அதிகாரியுடன் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது வழங்கப்படும் பொருட்கள் தரம் மற்றும் எடை ஆகியவை சரியாக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் போது கரூர் வட்டாட்சியர் குமரேசன், வட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படை வட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.