தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் தின விழாவில் மஞ்சள்பை வழங்கல்.

63பார்த்தது
தேசிய பசுமை படை சுற்றுச்சூழல் தின விழாவில் மஞ்சள் பை வழங்கல்.

கரூர் பேருந்து நிலைய வளாகத்தில் தமிழக அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, கரூர் மாவட்ட தேசிய பசுமை படை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் குழு உறுப்பினர்கள், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பொதுமக்களுக்கு மஞ்சள் பை மற்றும் சுற்றுச்சூழல் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

விழாவில் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் வேலுசாமி, தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் திருமூர்த்தி, நிர்வாகி கோபால் உள்ளிட்ட இந்த அமைப்புகளை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பேருந்து நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள வந்த பயணிகளுக்கும் மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.