கரூர்-பயங்கர ஆயுதங்களை வீட்டில் பதுக்கிய அரசியல் கட்சி மாவட்ட தலைவர் கைது.
கரூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக நேற்று மாலை ஜனவரி 10ஆம் தேதி கரூர் சுங்ககேட் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது டூவீலரில் வந்த ஒரு நபரை தடுத்து நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவரது பெயர் யுவராஜ் வயது 38, அகில பாரத மக்கள் கட்சியினுடைய கரூர் மாவட்ட தலைவர் என தெரியவந்தது.
மேலும், அவரது வாகனத்தை சோதனை இட்டபோது, பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வாள் ஒன்று அவரது வாகனத்தில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் அவரது வீட்டிற்கு அவரை அழைத்துச் சென்று அவரது வீட்டை சோதனை இட்டபோது, அவரது வீட்டில் 2 அருவாள்,
2- சூரிகத்தி, 2- வாள், ஒரு நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த பயங்கர ஆயுதங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.
மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போது, அவர் மீது ஏற்கனவே கரூர், நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.