கரூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆசாத் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு சொந்தமான பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் சுவாசக் கோளாறு ஏற்படும் நோயாளிகளின் வசதிக்காக, அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களில் வாயுக்களை கொண்டு செல்ல பயன்படும், காப்பர் ட்யூப்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவர் ரவி அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த கரூர் நகர போலீசார் காப்பர் ட்யூப்களை திருடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.