கரூரில் மனு அளிக்க வந்தவர்களை காவல்துறையினர் பரிசோதித்ததால் பரபரப்பு
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுவாக அளிப்பது வழக்கம்.
ஒரு சிலர் மனு அளித்து உரிய நடவடிக்கை எடுக்காத சூழலில் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொள்ளும் சூழல் சமீப காலத்தில் அதிகமாக நடந்ததால், ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழையும் அனைத்து பொது மக்களையும் தரவாக பரிசோதனை செய்து அவர்களை உள்ளே அனுப்ப வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பெயரில், காவல்துறையினர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் அனைத்து பொதுமக்களையும் தடுத்து நிறுத்தி அவர்கள் கொண்டுவந்த உடைமைகளை பரிசோதனை செய்தனர்.
போராட்டம் நடத்தும் எண்ணத்தில் எவரேனும் மண்ணெண்ணை கொண்டு வருகிறார்களா என்பதை சோதிப்பதற்காக அவர்கள் கொண்டுவரும் குடிநீர் பாட்டிலையும் திறந்து பரிசோதனை மேற்கொண்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.