கரும்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கரும்புடன் மனு

61பார்த்தது
கரூரில், புகளூர் சர்க்கரை ஆலை நிர்வாகம்,
கரும்பு விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கரும்புடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.


கரும்பு விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை பெறுவது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமையில் 20- மேற்பட்ட விவசாயிகள் கரும்புகளை கையில் ஏந்தியவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்த மாவட்ட செயலாளர் மூர்த்தி, கரூர் மாவட்டத்தில் சுமார் 90 சதவீதம் கரும்பு விவசாயிகளுக்கு புகளூர் பகுயில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யப்பட்டு, கரும்பு பயிரிடப்பட்டு வருகிறது.

கடந்த 3- ஆண்டுகளாக மஞ்சள் இலை நோயினால் கரும்புகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 40 முதல் 50 டன் வரை அறுவடை செய்த நிலையில்,
தற்போது ஒரு ஏக்கருக்கு ஒரு டன் கூட அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.

விவசாயிகள் தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்யும்போது காப்பீட்டு செய்யப்படுகிறது.

ஆனால், ஆலை நிர்வாகம் சார்பில் குறைந்த அளவு காப்பீடுத் தொகை வழங்கப்படுகிறது.

எனவே தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு 50, 000 காப்பீட்டு தொகையும், காப்பீடு செய்யாதவர்களுக்கு 1- ஏக்கருக்கு 25, 000 நஷ்டஈடு தொகை வழங்க மனு வழங்கியதாக கூறினார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி