வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் மக்கள் சாலை மறியல்

68பார்த்தது
கரூர் சின்ன ஆண்டாங் கோவில் ரோடு மேற்கு ஸ்டேட் பேங்க் காலணியில் ஆண்டாங் கோவில் கீழ்பாகத்திற்குட்பட்ட சில இடங்களில் இன்று பெய்த ஒரு மணி நேர கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானனர்.

தொடர்ந்து கடந்த ஒரு மாத அளவில் மூன்று முறை தங்களது குடியிருப்பு பகுதிக்கு இதே போல் மழை நீர் வந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி திடீரென சின்ன ஆண்டாங் கோவில் சாலையில் ஸ்டேட் பேங்க் காலனி பொதுமக்கள் தங்களுடைய நான்கு சக்கர கார்கள் , இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கரூர் நகர போலீசார் மற்றும் சின்ன ஆண்டாங் கோயில் கீழ்பாக அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலை மறியல் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி