பரமத்தி-வெறிநாய்கள் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி

65பார்த்தது
பரமத்தி- வெறி நாய்கள் தாக்கியதில் 10க்கும் மேற்பட்ட ஆடுகள் பலி. தொடர்ச்சியாக நடந்து வரும் சம்பவத்தால் விவசாயிகள் வேதனை.

க. பரமத்தி அடுத்த நெடுங்கூர்-ஐ சேர்ந்தவர் ராசப்பன். இவர் தனது வீட்டுக்கு அருகே பட்டி அமைத்து அதில் 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று வழக்கம் போல தனது நிலத்தில் மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீடு திரும்பி உள்ளார்.

வழக்கம்போல் இன்று காலை ஆடுகளை பார்ப்பதற்கு பட்டிக்கு வந்த ராசப்பன் 7 பெரிய ஆடுகளும், 4 குட்டிகளும் வெறிநாய்கள் கடித்து இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், 5-க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்திருந்தன.

தகவலறிந்த கால்நடைத்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் தொடர்ந்து வெறிநாய் தாக்குதலுக்கு உள்ளாகி ஆடுகள் பலியாகும் சம்பவம் தொடர்கதையாக நடந்து வருகின்றன.

வெறிநாய் தாக்கியதில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஆடுகள் இறந்துள்ளது.

இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி