வாங்கபாளையம் பஸ் ஸ்டாப் அருகே டூவீலர் மீது ஆம்னிவேன் மோதி விபத்து. ஒருவர் படுகாயம்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராமானுஜம் நகரை சேர்ந்தவர் சடையப்பன் வயது 52.
இவர் ஜூன் ஒன்றா
1-ம் தேதி இரவு 8: 30 மணி அளவில், வெங்கமேடு ஓட்ட பிள்ளையார் கோவில் சாலையில் இருந்து வாங்கல் செல்லும் கிராம சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இவரது வாகனம் வாங்க பாளையம் பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது,
அதே சாலையில் வெங்கமேடு என் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்த பன்னீர் வயது 40 என்பவர் வேகமாக ஓட்டி வந்த ஆம்னி வேன் சடையப்பன் ஓட்டி சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த சடையப்பனை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் தொடர்பாக சடையப்பன் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , ஆம்னி வேனை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பன்னீர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்
வெங்கமேடு காவல்துறையினர்.