நாவல் நகரில் வீட்டை விட்டு வெளியேறிய வாலிபர் வீடு திரும்பவில்லை. சகோதரர் புகார்.
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன வடுகப்பட்டி அருகே உள்ள நாவல் நகரை சேர்ந்தவர் செல்ல முத்து மகன் மோகன்ராஜ் வயது 36.
இவர் மார்ச் 9ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் விசாரித்துப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப்பெறாததால், மோகன்ராஜ்-ன் சகோதரர் ரவீந்திரன் வயது 39 என்பவர் காவல் நிலையத்தில் தனது சகோதரனை காணவில்லை என புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மாயமான மோகன் ராஜை தேடி வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.