கரூரில் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மூன்றாம் ஆண்டு விழாவாக இன்று நாதஸ்வர மற்றும் தவில் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் நாதஸ்வர இசைகளை வாசித்தபடி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வளாகத்தில் இருந்து நான்கு மடவாடகத்தை சுற்றி ஊர்வலமாக வந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஐயப்பன் சேவா சங்கம் திருமண மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாதஸ்வரம் தவில் கலைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நாதஸ்வரம் , தவில் கலைஞரை கௌரவிக்கும் விழா நடைபெற்றது.