நரிகட்டியூர் பிரிவில் டூ வீலர் சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதல்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கார் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல்.
வயது 57.
இவர் பிப்ரவரி 19ம் தேதி மாலை 4 மணி அளவில், பசுபதிபாளையத்தில் இருந்து புலியூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்றார். தொழிற்பேட்டை நரிக்கட்டியூர் பிரிவு அருகே சென்றபோது,
எதிர் திசையில் சரக்கு வாகனம் வேகமாக வந்து, சிங்காரவேல் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிங்காரவேலுவை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
சிங்கார வேலுவின் மனைவி லதா அளித்த புகாரில், சம்பவ இடத்தில் விசாரணை செய்த காவல்துறையினர், சரக்கு வாகன டிரைவர் மீது வழக்கு பதிவு செய்தனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.