கரூரில் அருள்மிகு மாரியம்மன் ஐயப்பன் யாத்திரை குழு சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தேர்வீதி வியாபாரிகள் மற்றும் சாத்தானி சந்து பொதுமக்கள் இணைந்து, ஆண்டுதோறும் கரூர் அருள்மிகு மாரியம்மன் யாத்திரை குழு என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று டிசம்பர் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அருகில் சாத்தானி சந்து ஸ்ரீ ஐயப்பனுக்கு அபிஷேகமும், அதனைத் தொடர்ந்து மாலை ஸ்ரீ ஐயப்பனுக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ ஐயப்பன் திருவுருவ அலங்கார ஊர்தியில் திருவீதி உலாவும், இரவு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஐயப்ப பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு ஐயப்பனின் அருள் பெற்று சென்றனர்.