கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் தலைமை பண்பாலும் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் கரூர் மாநகரை சேர்ந்த தொழிலதிபர் சிந்தியா நடேசன் தலைமையில் பல்வேறு கட்சிகளை சார்ந்த 200 பேர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுகம், கரூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சரவணகுமார், தாந்தோணி வடக்கு ஒன்றிய தலைவர் யுவராஜ், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் உடனிருந்தனர்.