மூர்த்திபாளையம்-ரயில் பாதை சீரமைப்பு. ரயில் சேவையில் மாற்றம்.

68பார்த்தது
கரூர் அருகே மூர்த்தி பாளையத்தில் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மார்ச் 18ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட PRO அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 08. 10 மணிக்கு புறப்படும் ரயில் எண். 56106 ஈரோடு - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில், 18. 03. 2025 அன்று ஈரோடு - கரூர் இடையே ரத்து செய்யப்படும். இந்த ரயில் ஈரோட்டிலிருந்து கரூர் சந்திப்பிற்கு இயக்கப்படாது. அன்று கரூரில் இருந்து காலை 09. 30 மணிக்கு புறப்பட்டு திருச்சிராப்பள்ளி சந்திப்பிற்கு இயக்கப்படும்.

இதே போல, ஈரோடு சந்திப்பிலிருந்து காலை 05. 20 மணிக்கு ஒரு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படும்.

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07. 20 மணிக்க புறப்படும் ரயில் எண். 56809 திருச்சிராப்பள்ளி - ஈரோடு பயணிகள் ரயில், 18. 03. 2025 அன்று கரூர் ரயில் சந்திப்பில் நிறுத்தப்படும்.

மூர்த்திபாளையம் ரயில்வே யார்டில் பணிகள் முடிந்ததும், 18. 03. 25 அன்று கரூர் சந்திப்பிலிருந்து ஈரோடு சந்திப்பிற்கு முன்பதிவு செய்யப்படாத சிறப்பு ரயில் இயக்கப்படும் எனவும், பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு தங்கள் பயணித்திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும் என ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் se தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி