டிஎன்இபி எம்பிளாயீஸ் பெடரேசன் சார்பில் பல்வேறு தீர்மானம்

162பார்த்தது
கரூரில், டிஎன்இபி எம்பிளாயீஸ் பெடரேசன் சார்பில் நடைபெற்ற மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் காலி பணியிடங்களை நிரப்புதல், கேங்மேன் விருப்ப மாறுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம். கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் டிஎன்இபி எம்பிளாய்ஸ் ஃபெடரேஷன் சார்பில் கரூர் மண்டல செயல் வீரர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் சேக்கிழார் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் பொதுச் செயலாளர் சேக்கிழார் - செய்தியாளர்களிடம் தெரிவிக்கும் போது, காலிப் பணியிடங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசும், மின்சார வாரியமும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கேங்மேன் பணியாளர்களின் விடுப்பு, மாறுதல், ஊதிய உயர்வு, விடுப்பு சலுகைகள், களப்பணி, பதவி உயர்வு மற்றும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சொந்த ஊர்களிலேயே பணி நியமனம் செய்ய வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும். ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மின்வாரியத்தை தனியார் மையம் ஆக்குவதை கைவிட வேண்டும். அலோன்ஸ் கமிட்டி & வேலைப்பளு கமிட்டிகளை அமைக்க விரைந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட 7- கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி