அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி ஏற்பு. திமுகவினர் கொண்டாட்டம்.

67பார்த்தது
நேற்று முன்தினம்(செப்.27) உச்ச நீதிமன்றம் ஜாமீன் அளித்ததை தொடர்ந்து சிறையிலிருந்து வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று(செப்.29) மீண்டும் சென்னையில் தமிழக அமைச்சராக சற்று முன் பதவி ஏற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கரூரில், திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கரூர் பேருந்து நிலையம் பகுதியில் திமுகவினர் ஒன்று கூடினர். ரவுண்டானாவில் உள்ள அறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி அமைச்சர் செந்தில் பாலாஜியை வாழ்த்தி, கோஷங்கள் எழுப்பி கொண்டாடினார்.

தொடர்புடைய செய்தி