விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செந்தில் பாலாஜி பரிசுகள் வழங்கினார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டி மாவட்ட அளவில் நடைபெற்றது.
இந்த போட்டியில் வெற்றி பெற்ற 1000 மாணவ, மாணவிகளுக்கு இன்று கரூர் கோவை சாலையில் உள்ள பிரேம் மஹால் திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு கோப்பைகளையும், உதவி தொகையும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.