ஜெம் மருத்துவமனை ரோட்டரி சங்கம் நடத்திய மருத்துவ முகாம்.

70பார்த்தது
கோவை ஜெம் மருத்துவமனை கரூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாம்.

கரூர்-கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் கரூர் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் கரூர் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் முரளி தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஜெம் மருத்துவமனை அறுவை சிகிச்சை துறை தலைவர் பிரவீன் ராஜ், குடல் நோய் அறுவை சிகிச்சை நிபுணர் ராஜபாண்டியன், லயன் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் உத்தமன் செரோமல், பொருளாளர் கருணாநிதி, மருத்துவர் மனோகர், மருந்தாளுநர் ஞானபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த மருத்துவ முகாமில்,

வயிற்றுக்கோளாறு, மலக்குடல், பெருங்குடல், கல்லீரல், கர்ப்பப்பை கோளாறு, குடலிறக்கம், இரைப்பை, பித்தப்பை கற்கள், ஓவரி கட்டிகள், குடல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மேலும், பரிசோதனை முடிவில் மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது. நடைபெற்ற இந்த முகாமில் கரூர் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உடல் பரிசோதனையை மேற்கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி