மணவாடி-சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் கடத்தல் லாரி பறிமுதல்.

85பார்த்தது
மணவாடி பஸ் ஸ்டாப் அருகே சட்ட விரோதமாக கிரானைட் கற்களை கடத்தி வந்த நபர் கைது. லாரி பறிமுதல்.

கரூர் புவியியல் மற்றும் சுரங்க துறை வருவாய் ஆய்வாளர் கார்த்திக் வயது 35 என்பவர், நேற்று பிப்ரவரி 21ஆம் தேதி மதியம் 12 மணியளவில் மணவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.

அப்போது அவ்வழியாக மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு பகுதியைச் சேர்ந்த பிரசாத் வயது 45 என்பவருக்கு சொந்தமான லாரியை, அதே பகுதியைச் சேர்ந்த துரைப்பாண்டி வயது 54 என்பவர் ஓட்டி வந்தார்.

இவரது லாரியை தடுத்து நிறுத்தி சோதனை இட்டபோது, லாரியில் அனுமதி இன்றி 5 கிரானைட் கற்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.


உடனடியாக லாரியை கிரானைட் கற்கள் உடன் பறிமுதல் செய்து, இது தொடர்பாக வெள்ளியனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், லாரி டிரைவர் துரைப்பாண்டியை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்து மார்ச் 5-ம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெள்ளியணை காவல்துறையினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி