பெண்ணை தகாத வார்த்தை பேசி அறிவாளை காட்டி மிரட்டியவர் கைது.

66பார்த்தது
நெரூர்- மது போதையில் வேலைக்குச் சென்ற பெண்ணை இடைமறித்து தகாத வார்த்தை பேசி அறிவாளை காட்டி மிரட்டியவர் கைது.

கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, நெரூர் வடக்கு அருகே உள்ள பார்க் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மனைவி வடிவுக்கரசி வயது 42.

இவரது அருகாமை வீட்டில் வசித்து வருபவர் குமார் வயது 50. பெயிண்டராக பணியாற்றி வரும் இவர் மது போதைக்கு அடிமையானார்.

இதனால், அடிக்கடி வடிவுக்கரசியுடன் குமார் தகராறு செய்து வந்தார்.

இந்நிலையில் ஜனவரி 9-ம் தேதி காலை 9 மணி அளவில், வேலைக்கு செல்வதற்காக தனது சைக்கிளில் சென்றார் வடிவுக்கரசி.

அப்போது, அங்கு மது போதையில் வந்த குமார் வடிவுக்கரசியை இடைமறித்து, தகாத வார்த்தை பேசி தகராறு செய்துள்ளார். மேலும் கையில் இருந்த அறிவாளை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக வடிவுக்கரசி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், மது போதையில் பெண்ணிடம் தகாத செயலில் ஈடுபட்ட பெயிண்டர் குமாரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து ஜனவரி 23ஆம் தேதி வரை சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் வாங்கல் காவல்துறையினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி