எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 450 பேர் மீது வழக்குப்பதிவு.

73பார்த்தது
கரூரில் அனுமதி இன்றி கூட்டத்தை கூட்டி தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 450 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு.

சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

இந்நிகழ்ச்சிக்காக அனுமதி இன்றி கூட்டத்தைக் கூட்டி, போக்குவரத்தை தடுத்து நிறுத்தி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக இரண்டு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அவை தலைவர் திரு. வி. க உள்ளிட்ட 400 ஆண்கள் 50 பெண்கள் உள்ளிட்ட 450 பேர் மீது கரூர் மாநகர போலீசார் வழக்குப்பதிவு.

தொடர்புடைய செய்தி