தலித்
விடுதலை இயக்கம் சம நீதிக் கழகத்தின் சார்பில் கரூர் உழவர் சந்தை பகுதியில் சனாதனமும் எதிர்ப்பு அரசியலும் விளக்கப் பொதுக்கூட்டம் சமநீதிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைசெல்வன் கலந்துகொண்டு சனாதானத்திற்கு எதிரான
அரசியல் குறித்து விசிக நிலைப்பாட்டை பேசினார்.
தலித்
விடுதலை இயக்கத்தின் மாநில தலைவர் ச. கருப்பையா ஆகியோர் கலந்துகொண்டு சனாதான கொள்கைகளை
அரசியல் அமைப்பு சட்டத்தில் புகுத்தும் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து சிறப்புரை நிகழ்த்தினார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் பானுமதி, தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட தலைவர் தனபால்,
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கரூர் திருச்சி மண்டல செயலாளர் தமிழாதன், விசிக கரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி, கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் குறிஞ்சி சக்திவேல், தலித் விடுதல இயக்கத்தின் மாநில தொண்டரணி செயலாளர் கராத்தே நிஷாக் ராஜா, சமநீதி கழகத்தின் தலைமை செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.