கரூர்: மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது தனியுரிமை

68பார்த்தது
கரூர்: மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுவது தனியுரிமை
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 2018ஆம் ஆண்டு திருமணம் ஆன நிலையில் தம்பதி இருவருக்கும் குழந்தை இல்லை. 2020 முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விவாகரத்து கோரி 2021ஆம் ஆண்டு கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த கணவர், மனைவிக்கு பாலியல் நோய் இருப்பதாகவும், அதிக நேரம் செல்போனில் செலவழிப்பதாகவும் காரணம் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் விவாகரத்து வழக்கு விசாரிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மனைவி பாலியல் படங்கள் பார்ப்பதோ, சுய இன்பத்தில் ஈடுபடுவதோ கணவரை துன்புறுத்தும் குற்றம் இல்லை. அது அவரின் தனிப்பட்ட உரிமை.

ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் செய்வதை குற்றமாக கருத இயலாது என்று கூறினார். மேலும் கரூரைச் சேர்ந்த நபர் மேற்கண்ட காரணங்களைக் குறிப்பிட்டு தனக்கு விவாகரத்து கோரியிருந்த நிலையில், அவரின் மனுவை தள்ளுபடி செய்தும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி