கரூர் - தெரு நாய்கள் தொல்லை. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
By sampathkumar 82பார்த்ததுகரூர் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை. நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த கரூர் நகர பகுதிகளில் பகல், இரவு என பாராமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரிகிறது.
நாய்களிடையே திடீரென ஏற்படும் சண்டையால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
கடந்த காலங்களில் இது போன்ற நிலை ஏற்படும் போது, தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தியது.
மாநகராட்சியாக தரம் உயர்த்திய போது ஒரு முறை மட்டுமே இந்த செயல்பாடு நடைபெற்றது.
அதன் பிறகு முழுமையான நடவடிக்கை இல்லாததால், தற்போது தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த மாதம் காந்திகிராமத்தில் ஆட்டுப்பட்டிக்குள் நுழைந்து தெரு நாய்கள் நான்கு ஆடுகளை கடித்து குதறிக் கொன்றது.
மேலும், வயதில் மூத்தவர்கள் உடல்நலம் கருதி, நடை பயிற்சி மேற்கொள்ளும் போது, அவர்களையும் நாய்கள் கடித்து விடுவதால் பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது.
எனவே மாநகராட்சி நிர்வாகம் நாய்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.