கரூர்-போக்சோவழக்கில் 6- குற்றவாளிகளுக்கு கடுங் காவல் தண்டனை

63பார்த்தது
கரூர்- போக்சோ வழக்கில் 6- குற்றவாளிகளுக்கு கடும் காவல் தண்டனை.


கரூர் அடுத்த ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி ஒரு சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த விவகாரத்தில், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, கரூர் தாந்தோணி மலை வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நிஷாந்த் வயது 24, குறிஞ்சி நகரை சேர்ந்த அரவிந்த் வயது 24, திருக்கம்புலியூரை சேர்ந்த வசந்தகுமார் வயது 24, கல்லுமடை பெருமாள் பட்டி காலனியைச் சேர்ந்த கலைவாணன் வயது 29, மருதம்பட்டி காலனியைச் சேர்ந்த கோகுல்நாத் வயது 24, கரூர் வையாபுரி நகரை சேர்ந்த பார்த்திபன் வயது 31 ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி தங்கவேல் நிஷாந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், மற்ற 4- பேருக்கு 3- ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1, 000- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் ஆறு பேரையும் பலத்த பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி