கரூர் இசைப்பள்ளி தவில் ஆசிரியர் பணி நீட்டிப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு அரசு ஊழியர் அய்க்கிய பேரவை கலை பாண்ட்டுத்துறை ஆசிரியர் ஊழியர் பேரவை, மாநில பொதுச் செயலாளர் அய்யனார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூர் நகர் மையப் பகுதியில் அமைந்துள்ள அரசு இசைப்பள்ளியில் தவில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் கா. ஜெயராஜ், இவர் கடந்த ஜூலை 31ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி, மேலும் ஒரு கல்வியாண்டு பணி நீட்டிப்பு வழங்க அனைத்து விண்ணப்பங்களையும் தமிழக கலை பண்பாட்டு துறை மண்டல உதவி இயக்குனருக்கு அனுப்பி வைத்துள்ளார். இதனை இயக்குநருக்கு அனுப்பி வைக்காமல் காலதாமதம் செய்துள்ளார்.
ஆனால் நேற்று ஜூலை 31ஆம் தேதி வரை பணிநீட்டிப்பு வழங்குவதற்கான எந்த தகவலும் இசை பள்ளி தலைமை ஆசிரியருக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கா. ஜெயராஜ் ஓய்வு பெறும் நாளில், பணி நீட்டிப்பு தமிழக அரசு வழங்கவில்லை என தகவல் தெரிந்ததும், பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து விசிக, அரசு ஊழியர் அய்க்கியப்பேரவை கலைபாண்பாட்டுத்துறை ஆசிரியர் ஊழியர் பேரவை பொதுச் செயலாளர் அய்யனார் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், பணி நீட்டிப்பு வழங்குவதில் சாதிய பாகுபாடு காட்டினால் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என தெரிவித்தார்.