கரூர் தலைமை தபால் அலுவலகத்தில், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, கருத்தியலான ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை அமல்படுத்திட கோரி, தமிழக முதல்வர், நெடுஞ்சாலை துறை அமைச்சர், நிதி அமைச்சர், தலைமைச் செயலாளர், நிதிச் செயலாளர், நெடுஞ்சாலைத்துறை அரசு முதன்மைச் செயலாளர், தலைமை பொறியாளர், முதன்மை இயக்குநர் ஆகியோருக்கு 500-க்கும் மேற்பட்ட தபால் அனுப்பும் போராட்டம் சங்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் சிங்கராயர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் வெங்கடேஸ்வரன், மகேந்திரன், ரமேஷ், தங்கவேல், கணேசன், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் குப்புசாமி தபால் அனுப்புவது குறித்து விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் சிறப்புரை நிகழ்த்தினார்.