கரூர்- பொய்யான வழக்கு போடும் திமுக & காவல்துறை- MRV பேட்டி.

1பார்த்தது
கரூர் பொய்யான வழக்கு போடும் திமுக & காவல்துறை- MRV பேட்டி

கரூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர்.

அப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது தம்பி சேகர்க்கு சொந்தமான நிலம் க. பரமத்தி காவல் எல்லைக்குட்பட்ட அனியாபுரம் பகுதியில் உள்ளது.

இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் ஆற்றில் மணலை அள்ளி வந்து தம்பி நிலத்திற்கு அருகாமையில் குவித்து வைத்து லாரியில் விற்று வந்தனர்.

காவல்துறையினர் மணலையும் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்தனர்.

அதேசமயம் எனது தம்பி நிலத்தில் தான் இருந்தது என அவரையும் அவருடன் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு தொடுத்தனர் போலீசார்.

இதனை அப்பகுதியைச் சேர்ந்த வி ஏ ஓ, ஆர் ஐ உறுதிப்படுத்திய பிறகும் கூட பொய்யான வழக்கு பதிவு செய்து எனது தம்பியை தேடும் படலத்தில் ஈடுபட்டதால், மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.

நீதிமன்றத்தில் காவல்துறையினர் தம்பி மீது வழக்குப் பதியவில்லை என கூறியுள்ளனர்.

அதனை அபிடவிட் ஆக தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.

நிலமை இவ்வாறு இருக்க வேண்டும் என்றே பொய்யான வழக்கு தொடுத்து சமூகத்தில் எனது பெயரை கெடுப்பதற்காக திமுகவினரும், போலீசாரும் இவ்வாறு செயல்படுகின்றனர் என குற்றம் சாட்டினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி