கரூர் மாவட்டத்தில் 116.10 மில்லி மீட்டர் மழை பதிவு

72பார்த்தது
வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்காள கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு செய்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்தது. 

இதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 17.80 மில்லிமீட்டர், அரவக்குறிச்சியில் 4.20 மில்லிமீட்டர், அனைப்பாளையத்தில் 11.00 மில்லிமீட்டர், க.பரமத்தியில் 30.00 மில்லிமீட்டர், குளித்தலையில் 8.60 மில்லிமீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 13.50 மில்லிமீட்டர், மாயனூரில் 9.00 மில்லிமீட்டர், பஞ்சபட்டியில் 6.00 மில்லிமீட்டர், கடவூரில் 3.00 மில்லிமீட்டர், பாலவிடுதியில் 3.00 மில்லிமீட்டர், மைலம்பட்டியில் 10.00 மில்லிமீட்டர் என மொத்தம் மாவட்ட அளவில் 116.10 மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 9.68 மில்லிமீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி