கரூர் மாவட்டம் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் உரங்களின் இருப்பு மற்றும் விலை விவரங்கள் அடங்கிய தகவல் பலகையில் தெளிவாக எழுதி கடையின் முன் விவசாயிகளுக்கு தெரியும்படி வைத்திட வேண்டும் என்று கூறினார். உரம் தொடர்பான புகார்களுக்கு வட்டார உர ஆய்வாளர் அல்லது வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.