கரூரில் மறைந்த தலைவருக்கு 18ம் ஆண்டு புகழஞ்சலி

76பார்த்தது
கரூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராமச்சந்திரன் தலைமையில், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள காமராஜர் சிலை முன்பு கன்சிராம் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அன்பழகன், மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் தங்கம், மாவட்ட பொது செயலாளர் தஸ்வின், மாவட்ட பொருளாளர் மற்றொரு ராமச்சந்திரன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் மணிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரை வீரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மறைந்த தலைவருக்கு தங்களது புகழ் அஞ்சலியை செலுத்தினர். மேலும், அவரது புகழை வாழ்த்தி கோஷங்களும் எழுப்பினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி