இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி.
By sampathkumar 82பார்த்ததுதிருவள்ளுவர் மைதானத்தில் இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழக அரசு கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது.
அந்த வகையில் கரூரில் மங்கள இசையை துரைசாமி குழுவினரும், தப்பாட்டக் கலையை சுதாகர் குழுவினரும், கோலாட்டத்தை சின்னதுரை குழுவினரும், சரித்திர புராண நாடகத்தை பழனிசாமி குழுவினரும், நையாண்டி மேளத்தை சண்முகம் குழுவினரும் நடத்தினர்.
ஒவ்வொரு கலை குழுவிலும் உள்ளுரை சேர்ந்த தலா பத்து கலைஞர்கள் வீதம் மொத்தம் 50 கலைஞர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரபு மற்றும் கலா ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.