ஜவஹர்பஜார்-மக்கள் கலை இலக்கிய கழக தும்பிவாடி கிளை துவக்கவிழா

73பார்த்தது
ஜவஹர் பஜாரில் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் தும்பிவாடி கிளை துவக்க விழா நடைபெற்றது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்
தும்பிவாடி கிளை துவக்க விழா இன்று கரூர் ஜவகர் பஜார் பகுதியில் உள்ள ரவீஸ் மினி மஹாலில் மாவட்ட செயலாளர் அரசப்பன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆலோசகர் ஜெகதீசன், புதிய கிளை நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மற்றும் வாழ்த்துரை வழங்கினார் மாநில பொதுச் செயலாளர் கோவன்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் லோகநாதன், மாநில மையக்கலை குழு பொறுப்பாளர் லதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் புகழேந்தி, ஆதித்தமிழர் பேரவை மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மணியம், தமிழ் பற்றாளர் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் சக்திவேல், தந்தை பெரியார் திராவிட கழக கரூர் தலைவர் தனபால் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, துவங்கப்பட்ட புதிய கிளை தொடர்ந்து மக்களுடைய பிரச்சினைகளை மையப்படுத்தி சிறப்பாக செயல்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Job Suitcase

Jobs near you