ஜல்ஜீவன் திட்டத்தில் இணைப்பு பெற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜல்ஜீவன் திட்டத்தில் இணைப்பு பெற ஊராட்சி தலைவரின் கணவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆட்சியரிடம் புகார் அளித்த முதியவர்.
கரூர் மாவட்டம், மின்னாம்பள்ளி ஊராட்சி, சங்கரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் காளியப்பன்.
இன்று இவர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனு ஒன்றை ஆட்சியரிடம் அளித்தார்.
அந்த மனுவில் பல வருடங்களாக சங்கரன்பாளையத்தில் வசித்து வருகிறேன். எனது வீட்டிற்கு பாரத பிரதமரின் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தில் மனு அளித்தேன்.
எனது பகுதியில் உள்ள அனைவருக்கும் இணைப்பு வழங்கப்பட்ட பிறகும், எனக்கு வழங்காதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று ஏழாவது முறையாக மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளரிடம் தெரிவித்த காளியப்பன், குடிநீர் இணைப்பு பெறுவது தொடர்பாக மின்னாம்பள்ளி ஊராட்சியில் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பாக ஊராட்சித் தலைவரின் நெருங்கிய நபராக உள்ள மோகன் என்பவர், ஊராட்சி தலைவரின் கணவரிடம் அவரது வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்டால் தான் குடிநீர் இணைப்பு வழங்க முடியும். இல்லையென்றால் ஜென்மத்திற்கும் இணைப்பு வழங்க முடியாது என தெரிவித்ததாகவும், இது தொடர்பாக இன்று மீண்டும் மாவட்ட ஆட்சியரிடம் ஏழாவது முறையாக மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார்.