தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை எனகூறுவது ஏற்புடையது அல்ல

52பார்த்தது
தமிழகத்தில் நடந்த ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து சட்ட ஒழுங்கு சரியில்லை என கூறுவது ஏற்க தகுந்தது அல்ல. சைலேந்திரபாபு கரூரில் பேட்டி.

+2 முடித்த மாணாக்கர்களுக்கு நடைபெற்ற கல்விக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க கரூர் வந்த முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், காவல்துறை உஷாராக தான் உள்ளது. ஒரு சில சம்பவங்கள் அப்படி இப்படி நடக்கலாம். ஆனால், அது நடக்கக் கூடாது.


அதையும் மீறி ஏதோ ஒரு சம்பவம் நடந்து விட்டால் அதை வைத்து சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என கூற முடியாது என்றும், திருநெல்வேலியைச் சேர்ந்த முன்னாள் எஸ். ஐ ஜாகிர் உசேன் விவகாரத்தில், கொல்லப்படும் முன் அவர் வெளியிட்ட வீடியோவை அதிகாரிகள் சீரியசாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அதிகாரிகள் தவறிவிட்டனர்.

இதில் அந்த காவலர் மீது நடவடிக்கை எடுத்து உள்ளார்கள். காவல்துறையில் வேலை பார்த்ததால் அவருக்கு இந்த பாதிப்பு ஏற்படவில்லை. அவரது தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இந்த கொலை ஏற்பட்டுள்ளது.

ஆனால், இதை முன்வைத்து காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் கூற முடியாது என்ற அவர்,

இதற்கு முன்பு வில்சன் என்ற காவல் உதவி ஆய்வாளர் பணியில் இருந்த போது தீவிரவாதியால்
சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
ஆயினும் உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி