வருகிற டிசம்பர் 28ம் தேதி மதுரையில் வேளாளர் ஒற்றுமை மாநாடு நடத்த முடிவு செய்து கரூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில் ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பண்பாட்டு நல சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் பண்பாட்டு நல சங்க தலைவர் செல்வராஜ் பிள்ளை தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் செயலாளர் தேவராஜ், கரூர் மாவட்ட
வ உ சி பேரவை தலைவர் மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், பண்ணை சொக்கலிங்கம் பிள்ளை சிறப்புரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவில் வரும் டிசம்பர் 28ஆம்
தேதி மதுரையில் வேளாளர் ஒற்றுமை மாநாடு நடத்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் , ஜாதி வாரி கணக்கெடுக்கும் போது வெள்ளாளர் குல வேளாளர்கள் என பதிவு செய்ய வேண்டும் எனவும்தீர்மானம் இயற்றினர்.