மோடி ஆட்சியை அகற்ற
இந்தியா கூட்டணி ஒற்றை இலக்கோடு செயல்படுகிறது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விளக்கம்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட உழவர் சந்தை பகுதியில் "நாட்டை காப்போம்" என்ற தலைப்பில் அனைத்து கட்சி பொதுக்கூட்டம் அமைப்பின் மாநில அமைப்பாளர் பிலோராணி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட தலைவர் தனபால், விசிக கட்சியின் LLF மாவட்ட பொறுப்பாளர் சுடர்வளவன், சுயாட்சி
இந்தியா கட்சியின் அகில இந்திய தலைவர் கிருஷ்டினா சாமி, மாவட்ட செயலாளர் மஞ்சுளா, சாமானிய மக்கள் கட்சி பொது செயலாளர் குணசேகரன், மாநகர செயலாளர் தென்னரசு,
காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணை தலைவர் ஸ்டீபன் பாபு, மக்கள் நீதி மையம் மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சிறப்புரையாற்றினார். அப்போது, மத்திய அரசு எத்தனை அழுத்தங்கள் கொடுத்தாலும்
இந்தியா கூட்டணியை தமிழகத்தில் வலிமையோடு வழி நடத்துகிறார் மு. க.
ஸ்டாலின் என்றார். அதேபோல, தோழமைக் கட்சியை சேர்ந்த தலைவர்கள், பொது வாழ்வில் இருக்கக்கூடிய அனைவரும் மக்கள் விரோத நரேந்திர மோடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.