வஞ்சிநாதன் நகரில் வளர்ச்சி திட்ட பணிகள் துவக்கி வைப்பு.

83பார்த்தது
வஞ்சிநாதன் நகரில் வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைத்தார் செந்தில் பாலாஜி.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாஞ்சிநாதன் நகர் பகுதியில்ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் 2024- 25 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை மேம்படுத்தும் பணி , தார் சாலை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டி , பணிகளை துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ , கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி , கரூர் மாநகராட்சி மேயர்
கவிதா கணேசன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் , அரசு துறை அதிகாரிகள் , பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவை சிறப்பித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி