ரூ. ஒரு கோடி மதிப்பில் சாலை புதுப்பித்தல் பணி துவக்க விழா. எம்எல்ஏ பங்கேற்பு.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரெங்கநாதபுரம் மற்றும் மணவாசி ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டம் 2025 -26 திட்டத்தில், ரூ. 99. 670- மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 67 முதல் நத்தமேடு வழி மேட்டாங்கனம் வரையில் சாலை புதுப்பித்தல் பணி துவக்க விழாவுக்கான பூமி பூஜை எம் எல் ஏ சிவகாமசுந்தரி தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கட்டளை ரவி ராஜா உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை முடிந்தவுடன் சாலை புதுப்பித்தலுக்கான பணியை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி.