ஆண்டு சராசரி மழை அளவை விட நடபாண்டில் 119. 24 மில்லி மீட்டர் அதிகம் பெய்துள்ளது.
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தகவல்
கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
விவசாயிகளின் குறைகளை அனைத்துத் துறை அலுவலர்கள் அறிந்து நிவர்த்தி செய்யும் வகையில் மாதந்தோறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் தெரிவிக்கும் போது,
கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
கரூர் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652. 20 மி. மீ ஆகும். நடப்பு ஆண்டு டிசம்பர் 2024 வரை 771. 44 மி. மீ மழை பெய்துள்ளது.
இக்கூட்டத்தில், குளித்தலை சார் ஆட்சியர் சுவாதிஶ்ரீ, வேளாண்மை இணை இயக்குநர் சிவானந்தம், கூட்டுறவு சங்ககளின் இணைப்பதிவாளர் கந்தராஜா, கால்நடை பராமரிப்புத்துறையின் இணை இயக்குநர் சாந்தி, வேளாண் துறை
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உமா, சமுகபாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பிரகாசம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பச்சமுத்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.