கரூரில், வலிமையான பாரதம் பேரணி நடத்த மாவட்ட ஆட்சியர்
பிரபு சங்கர் அனுமதி.
வரும் 2047 ஆம் ஆண்டு நடைபெறும் நூறாவது சுதந்திர தின விழாவிற்குள்
இந்தியா வலிமையான பாரதமாக மாறவும், உலகில்
இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்ற இலக்கோடும், சுற்றுச்சூழல் தன்னிறைவு பெற்ற தேசமாகவும், நோய் நொடி இல்லாத தேசமாகவும், 100% கல்வி அறிவு, தொழில் நுட்ப வளர்ச்சி பெற்ற தேசமாகவும், தேச ஒற்றுமையை வலியுறுத்தியும் விழிப்புணர்வு பிரச்சார பேரணி நடத்த கரூரில் செயல்படும் ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு சங்கம் முடிவெடுத்துள்ளது.
மேலும், வரும் டிசம்பர் மூன்றாம் தேதி மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பாக, 200க்கும் மேற்பட்ட மூன்று சக்கர வாகனத்தின் மூலம், கரூர் அடுத்த வெண்ணமலை முருகன் கோவில் பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணி நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவதோடு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என ஆனந்தம் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு மாநிலத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் வழங்கினர்
கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்
பிரபு சங்கர் அவர்களுக்கான அனுமதி அளித்து கையொப்பமிட்டு வாழ்த்து தெரிவித்தார்.